full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வலை திரைவிமர்சனம்

பொதுவாக நட்டி படங்கள் என்றாலே நிச்சயம் தரமான படங்களாக இருக்கும் என்று நம்பி போகலாம் காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் நம்மை ரசிக்க வைக்கும் அந்த வகையில் வெப் திரைப்படம் ரசிக்க வைக்கிறதா என்று விமர்சனத்தில் பார்க்கலாம்

 

இந்த படத்தில் நட்டி,சில்வா மஞ்சுநாத், தீபா, அபி அனன்யா, சுபாபிரியா,ஷாஷவி பாலா
ராகேஷ் தீப்ஸிக்கா மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் ஹரூன் இயக்கியுள்ளார்.

அபிநயா, நிஷா, மகா, தீபா இந்த நான்கு பெண்களும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் IT கம்பெனியில் வேலை செய்கின்றனர். மற்றும் இவர்களின் வாழ்க்கை முறையே மிகவும் வித்யாசமாக இருக்கிறது. எல்லா வார கடைசியிலும் இவர்கள் பார்ட்டிக்கு சென்று அங்கு போதைகளை எடுத்து கொள்கின்றனர்.

அப்படி ஒரு வார கடைசியில் இவர்கள் பார்ட்டிக்கு சென்று வரும்போது, நாயகன் நட்டி இவர்களை கடத்தி, அதில் ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்துவிடுகிறார். இதனை பார்த்த மற்ற மூன்று பெண்களும் மிகவும் பயந்துவிடுகின்றனர். தற்போது அங்கிருந்து தப்பிக்க நினைக்கும் இவர்கள் நட்டியிடமிருந்து தப்பித்தார்களா? அல்லது நட்டியிடம் மாட்டி இறந்தார்களா? என்பதும் நட்டி இதனை எதற்காக செய்கிறார் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் ஹரூன் இயக்கியுள்ளார். கதையில் கவனம் செலுத்திய இயக்குனர் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார் என்று தான் சொல்லணும். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நம்மை அரங்கத்தில் நெளிய வைக்காமல் இருந்து இருக்கும் சுவாரிசம் இல்லாத திரைக்கதை கவர்ச்சியில் கவனம் செலுத்திய இயக்குனர் திரைக்கதையில் கவனித்து இருந்து இருக்கலாம்.

நட்டி மீண்டும் நம்மை சோதித்து விட்டார்.என்று சொன்னால் மிகையாகாது ஏன் இப்படி கதைகளை தேர்வு செய்கிறார். நட்டி உங்கள் பாத்திரம் மட்டும் நல்லா இருந்தால் போதாது.

சில்பா இளைஞர்களுக்கு விருந்து கொடுத்து இருக்கிறார். ஆனால் ரசிக்க முடியவில்லை.