full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

ஓ.டி.டியில் ரிலீசாகுமா ‘பார்ட்டி’ ? – தயாரிப்பாளர் விளக்கம்

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி’. வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும், இப்படம் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் இருந்தது. இதனிடையே இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதற்கு மறுப்பு தெரிவித்து அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்படுள்ளதாவது: எங்களது ‘பார்ட்டி’ திரைப்படம் திரையரங்குகளுக்கு பதிலாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சில ஊடங்களில் வந்த செய்திகளை நாங்கள் கவனித்தோம். அது உண்மையில்லை. வெறும் வதந்தி. அப்படி எந்த திட்டமும் எங்களிடம் இல்லை”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.