full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் சஞ்சீவுடன் மீண்டும் ஷூட்டிங்கிற்கு தயாராகும் ஆல்யா மானஸா

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டதாக கடந்த செப்டம்பரில் சஞ்சீவ் கார்த்திக் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆல்யாவிற்கு கடந்த ஜனவரி மாதம் வளைகாப்பு நடந்தது. இதனை வீடியோவாக சஞ்சீவ் வெளியிட, அது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அவ்வப்போது ஆல்யா மானஸாவுடன் அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

இதனையடுத்து சஞ்சீவ் மட்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘காற்றின் மொழி’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரும் ‘ராஜா ராணி’ தொடரைப் போலவே சஞ்சீவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இந்நிலையில் நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ஜான்சன்ஸ் பேபி விளம்பர படப்பிடிப்பில் சஞ்சீவ் கார்த்திக்கின் மேக்கிங் வீடியோ என்று குறிப்பிட்டுள்ளார்.