full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ரஜீஷ் இயக்கத்தில் ஹீரோவாகும் யமஹா

ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்து வரும் முதல் திரைப்படம் ‘வண்டி’.

விதார்த், ஸ்ரீராம் கார்த்திக், எம்.ஆர். கிஷோர்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சாந்தினி, ஜான் விஜய், அருள் தாஸ், சாமிநாதன், மதன் பாப், சூப்பர் குட் சுப்பிரமணியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு வசனம் – அரசு, ஒளிப்பதிவு – ராகேஷ் நாராயணன், படத்தொகுப்பு – ரிசால் ஜெய்னி, இசை – சூரஜ் எஸ் குரூப், கலை – மோகன மகேந்திரன், பாடல்கள் – சினேகன், சங்கீத், நடனம் – தினேஷ், ஜாய் மதி, சண்டை பயிற்சி – சிறுத்தை கணேஷ், நிர்வாகத் தயாரிப்பு – தர்மர் சசிகுமார், தயாரிப்பு – ஹஷீர். எழுத்து, இயக்கம் – ரஜீஷ் பாலா

இப்படம் குறித்து பேசிய போது, “காணாமல் போன தன்னோட சைக்கிளைத் தேடும் குடும்பஸ்தன் கடைசியில் வேறொருவரின் சைக்கிளைத் திருடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு அவன் வாழ்க்கையில் தொலைந்து போன சைக்கிளால் என்ன ஆனான், என்பதை பை-சைக்கிள் தீவ்ஸ் என்ற படத்தைப் பார்த்து உலகமே வியந்தது.

அதே போல் ஒரு இளைஞன் தன்னோட அப்பாவின் வாழ்நாள் சேமிப்பு எல்லாத்தையும் துடைத்து எடுத்து ஒரு பல்சர் பைக்கை – ஐ வாங்குகிறான். தான் ஆசைப்பட்ட பைக் வந்ததும் அது நாள் வரை வெறுமனே பார்த்து வந்த பெண் காதலிக்கத் தொடங்குகிறாள். வேலை கிடைத்து கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் போது அந்த பைக் காணாமல் போகிறது. அந்த பைக்கால் அவன் என்ன ஆனான் என்பதை பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் பார்த்தோம்.

தற்போது, விதார்த், ஸ்ரீராம் கார்த்திக், எம்.ஆர். கிஷோர்குமார் நடிக்க, அறிமுக இயக்குனர் ரஜீஷ் பாலா இயக்கும் இந்த படத்தில் யமஹா ஆர் எக்ஸ் 135 என்ற பைக் படத்தின் முக்கிய பாத்திரமாக வருகிறது. அதுவும் மூன்று தளங்களில் நடக்கும் கதையில் அந்த யமஹா பைக் மூன்று பரிமாணத்தில் தோன்றுகிறது. கதையில் பைக்கே பிரதானமாக வருவதால் படத்தின் தலைப்பே வண்டி என்று பெயர் வைக்கும் அளவுக்கு இயக்குனரை தொந்தரவு படுத்தியிருக்கிறது.” என்றார்.