full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

யோகிபாபு நடிக்கும் “பட்டிபுலம்”

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு “பட்டிபுலம்” என்று பெயரிட்டுள்ளனர்…

இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார் கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார்…இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில் நடித்தவர்…மற்றும் சேரன் ராஜ் சூப்பர்குட் சுப்ரமணி  ஆகியோர் நடிக்கிறார்கள்.

நான் ஷக்திசிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன்…அந்த பார்முலா படி யோகி பாபுவௌ இந்த பட்டிபுலத்தில் பயன் படுத்திக் கொண்டேன். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் இல்லை ..படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார்.. அந்த ஒரு மணி நேரத்திற்கும்  அதகளப் படுத்தி இருக்கிறார்.

கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் இருக்கு..அந்த ஊரில் உள்ள சில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது …ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பது தான் கதை…இதை நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம்..

படத்தில் யோகி பாபுவுக்கு பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம்..படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது..என்றார்.