full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நான் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறேன் – ரஜினி, கமல் வழியில் இளம்நடிகர்

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் உதயநிதி அரசியலில் இறங்க தயார் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்த ஆண்டு நடிகர்கள் அரசியலில் இறங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன்.

நான் திமுக-வில் ஒரு அங்கம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நான் கட்சிப் பணியாற்றினேன். என் தந்தை மு க ஸ்டாலின் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டபோது நான் தொகுதி முழுவதும் சென்று பிரசாரம் செய்தேன். மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

ரஜினி, கமல், விஷால் அரசியலுக்கு வருவது குறித்து நான் கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. இப்போதும் நான் திமுக-வில்தான் இருக்கிறேன். தலைமைக்கழகம் அனுமதி அளித்தால் சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன்.” என்றார்.