full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கலாமின் நினைவுகளுடன் பயணிக்கும் இளைஞர்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புகழ்பாடும் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றியிருக்கிறார். இதை இயக்குனர் வசந்த் இசை ஆல்பமாக தயாரித்துள்ளார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அதில்,

“கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும்

நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால்

தூங்க விடாததே கனவு என்றாயே”

என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த இசை ஆல்பம் பற்றி பேசிய இயக்குனர் வசந்த், “காந்திக்குப் பிறகு ஒரு மாபெரும் தலைவரை இந்த தேசம் கண்டது. அவரது சிந்தனைகளை மறவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கலாமை நேசிக்கும் இளைஞர் ஒருவர் அவரது நினைவுகளுடன் பயணித்து ஜோத்பூர், ஜெய்ப்பூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கலாம் நினைவலைகளைத் தாங்கிய சில காட்சிகளை படமாக்கி இருக்கிறோம்.

இந்த இசை ஆல்பம் ராமேசுவரத்தில் 27-ந்தேதி கலாம் மணிமண்டப திறப்பு விழாவில் வெளியிடப்பட உள்ளது.” என்று கூறினார்.