அமெரிக்காவில் முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி கலக்கும் பிரமாண்ட இசை – நடன நிகழ்ச்சி

News
0
(0)

அமெரிக்காவில் முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி கலக்கும் பிரமாண்ட இசை – நடன நிகழ்ச்சி

அமெரிக்க மண்ணில் முதல் முறையாக சான் ஓசே நகரில் தென்னிந்தியை திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது.

யு1ஸ்டார் நைட் (U1Star Nite) என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இவர்களுடன் மக்கள் செல்வன், தமிழ் திரையுலகின் நம்பிக்கை நாயகன் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார்.

ஜூலை 6-ம் தேதி மாலை 6 மணிக்கு, கலிபோர்னியாவின் சான் ஓசே நகரில் உள்ள சிட்டி நேஷனல் சிவிக் (City National Civeic) அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா, விஜய் சேதுபதி, விஜய் யேசுதாஸ், ஹரிச்சரண், ராகுல் நம்பியார், ரஞ்சித், தன்வி ஷா, ரம்யா என்எஸ்கே, பவதாரிணி, ஆலப் ராஜு மற்றும் குழுவினர் பங்கேற்கின்றனர்.

இவர்களுடன் நடிகர்கள் மிர்ச்சி சிவா, டிடி, ஹரீஷ் கல்யாண், நடிகைகள் ரைசா வில்சன், ஜனனி அய்யர், யாஷிகா ஆனந்த், சஞ்சனா சாரதி, விஷ்ணுப்ரியா ஆகியோரும் கலந்து கொண்டு நடனமாடுகின்றனர்.

அமெரிக்காவில் இதுவரை இப்படியொரு பிரமாண்ட இசைக் கச்சேரி மற்றும் நடன நிகழ்ச்சி நடந்ததில்லை எனும் அளவில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

8 கே மைல்ஸ் மீடியா ஆதரவில் பினாகின் ஸ்டுடியோஸ், ஹேமா ரியல்டர்ஸ் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.