full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

என் ரசிகர்களுக்காகத் தான் இந்த படம் – யுவன் ஷங்கர் ராஜா!

“ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ்” சார்பாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறையாக தயாரித்திருக்கும் திரைப்படம் “பியார் பிரேமா காதல்”. “கே புரொடக்‌ஷன்ஸ்” சார்பில் ராஜராஜன் யுவன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கிறார்கள். இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா-வே இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.

இந்த விழாவில் பேசிய யுவன் ஷங்கர் ராஜா,

“நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் கிடந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் உங்க ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் என் ஃபேவரைட் பாடல் நிலவே நான் எங்கிருந்தேன் என்ற பாடல் தான்” என்றார்.

இந்த விழாவில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, ராம், அமீர், அஹமது,ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், ஐஸ்வர்யா தனுஷ், நடிகர்கள் தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், டி.இமான், சாம் சி.எஸ், நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, பாடலாசிரியர் விவேக், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.