full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

ZEE5, மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரத்தில், கண்கவர் 3D ப்ரொஜெக்‌ஷனில், காலத்தை வளைக்கும் மர்ம திரில்லரான ‘கியாரா கியாரா’ ஸ்னீக் பீக்கை வெளியிட்டது 

ZEE5, மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரத்தில், கண்கவர் 3D ப்ரொஜெக்‌ஷனில், காலத்தை வளைக்கும் மர்ம திரில்லரான ‘கியாரா கியாரா’ ஸ்னீக் பீக்கை வெளியிட்டது 

இந்தியா, 09 ஆகஸ்ட் 2024: மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரம் வெள்ளிக்கிழமை மாலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ZEE5 அதன் சமீபத்தில் வெளியிடப்பட்ட, மர்மத் திரில்லர் ‘கியாரா கியாரா’ சீரிஸின், வசீகரிக்கும் 3D ப்ரொஜெக்ஷனை நடத்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரில்லரின் ஒரு ஸ்னீக் பீக் மூலம், மும்பைவாசி பொது மக்கள் ஒரு அற்புதமான ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். குனீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மடிக் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கூட்டணி தயாரிப்பில், உமேஷ் பிஷ்ட் இயக்கியுள்ள ‘கியாரா கியாரா’ சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைரியா கர்வா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விக்டோரியன் கோதிக் கட்டிடக்கலைக்குப் பெயர் பெற்ற டேவிட் சாசூன் நூலகம், மும்பையின் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நிகழ்ச்சியின் தொடக்க நாளான ஆகஸ்ட் 9 அன்று நடந்த ஷோகேஸ், இந்த சீரிஸின் அறிமுகத்தை வெளிப்படுத்தி, பிரமிக்க வைக்கும் முன்னோட்டத்தை வழங்கியது. மும்பையின் மிகவும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றின் பின்னணியில், காலத்தை வளைக்கும் இந்த கதையை உயிர்ப்பித்தது.

ZEE5 இன் இந்த புதுமையான விளம்பர முயற்சி, பலதரப்பட்ட பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலான அதன் பிராண்டின் தனித்துவத்திற்கு ஒரு சான்றாகும். 3D புரஜக்சனுக்கு முன்னதாக, ZEE5 அதிரடி டிரெய்லர் வெளியீட்டையும், தொழில்துறையின் பிரபலங்கள் மற்றும் சினிமாக்காரர்களுக்கான சிறப்புத் திரையிடலையும் நடத்தியது.

சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தர்மடிக் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்களின் புதுமையான முயற்சியாக உருவாகியிருக்கும், கியாரா கியாரா பாஸிடிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு 11:11 மணிக்கு, இந்த திரில்லர் சீரிஸின் அனைத்து 8 எபிஸோடுகளும், ZEE5 ல் வெளியிடப்பட்டது. வெள்ளி அன்று எதிர்பார்த்ததைவிட அதிகமான வகையில் ZEE5 இல் பார்வையாளர்கள் குவிந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சீரிஸ், இந்தியாவின் OTT சுற்றுச்சூழல் அமைப்பில், உள்நாட்டு ஸ்ட்ரீமிங் தளத்தில் ZEE5 தலைமையை உறுதிப்படுத்துவதில், ஒரு வலுவான படியாகும்.

ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைர்யா கர்வா நடித்துள்ள கியாரா கியாரா, இன்றைய (2016) இளம் போலீஸ் அதிகாரியான யுக் ஆர்யாவின் (ராகவ் ஜூயல்) கதையைப் பின்தொடர்கிறது, அவர் ஷௌர்யா அந்த்வாலுடன் (தைரிய கர்வா) வாக்கி டாக்கி மூலம், 1990 களில் மூத்த துப்பறியும் நபர் உடன் தொடர்பு கொள்ளும், ஒரு மர்மமான தொடர்பு இணைப்பைக் கண்டுபிடிக்கிறார்.. இந்த தற்காலிக மர்மத்தின் முக்கிய கொக்கி வாமிகா ராவத் (கிருத்திகா கம்ரா), ஒரு காலத்தில் அவர் மர்மமான முறையில் காணாமல் போவதற்கு முன்பு, ஷௌர்யாவுக்கு வழிகாட்டியாக இருந்தவர், தற்போது யுகிற்கு வழிகாட்டுகிறார். ஷௌர்யாவும் யுக்வும் இணைந்து மர்மமான கேஸ்களை தீர்க்கின்றனர். கடிகாரத்தின் ஒவ்வொரு டிக் டிக் மூலம், கடந்த காலமும் நிகழ்காலமும் மோதும் மர்மங்களின் அடுக்குகளை ‘கியாரா கியாரா’ தோலுரித்துக் காட்டுகிறது, பார்வையாளர்களின் நேரத்தின் கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கி அவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.

ராகவ் ஜூயல் கூறுகையில்…, “இறுதியாக, காத்திருப்பு முடிந்துவிட்டது! ZEE5 இல் ‘கியாரா கியாரா’வின் முதல் காட்சிக்காக நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாகக் காத்திருந்தோம். இந்த சீரிஸ் போல ஒரு மாறுபட்ட சீரிஸில் நான் இதுவரை பங்கேற்றது இல்லை, டேவிட் சாசூன் லைப்ரரியில், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தில் நடந்த 3D ப்ரொஜெக்ஷன், மிக புதுமையானது. இது ZEE5 இல் சீரிஸின் வருகையை, அறிவிப்பதற்கான சரியான வழியாகும். இந்த சீரிஸை உடனடியாகப் பார்க்கும்படி, அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். என்னை நம்புங்கள், இந்த வார இறுதியில், இது உங்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.

கிருத்திகா கம்ரா கூறுகையில்.., “‘கியாரா கியாரா’ ZEE5 இல் வந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் நான் உண்மையில் 11:11 இன் மந்திரத்தை நம்ப ஆரம்பித்துவிட்டேன்!. டேவிட் சாஸூன் நூலகத்தின் கடிகார கோபுரத்தின் 3D ப்ரொஜெக்ஷன், நம் அனைவருக்கும் மிகவும் பெருமையான தருணம். 3டி ப்ரொஜெக்ஷன், விளக்குகள், ஒலி மற்றும் நாடகம் மூலம் கியாரா கியாராவின், மாயாஜாலத்தை உயிரோடு பார்ப்பது சிலிர்ப்பாக இருந்தது. இது ஒரு சிறந்த தொடக்கமாகும், இந்நிகழ்வு வரவிருக்கும் சாகசத்தின் மீதான, ஒரு பார்வையை அளிக்கிறது. ZEE5 இல் அனைவரும் ‘கியாரா கியாரா’ பார்த்து ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தைர்யா கர்வா கூறுகையில், “மூன்று போலீஸ் அதிகாரிகள், இரண்டு கால கட்டங்கள் மற்றும் ஒரு சிலிர்ப்பான அனுபவம்! ‘கியாரா கியாரா’ இறுதியாக ரசிகர்களிடம் வந்து சேர்ந்துள்ளது. பல தசாப்தங்களாக நம் செயல்களின் தாக்கங்கள், எல்லாவற்றையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதுதான் இந்த சீரிஸின் தனிச்சிறப்பு. டேவிட் சாஸூன் லைப்ரரியில் 3D ப்ரொஜெக்ஷன் ஒரு காட்சி விருந்தாக அமைந்தது. இது எங்கள் ஷோ எவ்வளவு உற்சாகமானது மற்றும் ஆடம்பரமானது என்பதைப் புரிய வைக்கும் என்று நம்புகிறேன். இது ஒரு தனித்துவமான திரில்லராகும். நேரத்தைப் பற்றிய கருத்தைப் புதிதாக எடுத்துக்கொள்வதால், உங்களை ஆச்சரியப்படுத்தி, உங்களைக் கடைசி வரை யூகிக்க வைக்கும்.

ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்குப் பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்க்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.

மேலும் சமூகவலைதளங்களில் ZEE5 ஐ தொடர :
Facebook – https://www.facebook.com/ZEE5
Twitter – https://twitter.com/ZEE5India
Instagram – https://www.instagram.com/zee5/