full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சம்மர் ரிலீசாக வருகிறது  ஜாம்பி

எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது இரண்டாம் கட்ட பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் அத்தோடு படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறும். 

 
      தற்போது யோகிபாபு , யாஷிகா ஆனந்த் ,  கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் பலர் பங்கேற்கும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போல தான் படத்தில் அதிமாக காட்சிகள் இடம்பெறுகிறது. ஆதலால் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் பிரபல வி.ஜி.பி போன்ற ரிசார்ட்களில் வைத்து தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது. 

    சமீபத்தில் வி.ஜி.பி ரிசார்ட்டில் 200 இளம் பெண்கள் மற்றும் யோகிபாபு , யாஷிகா ஆனந்த் , கோபி , சுதாகர் , கார்த்திக் , பிஜிலி ரமேஷ் , சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் ஒன்றாக பங்கேற்ற பிரமாண்டமான காட்சி படமாக்கப்பட்டது. ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி அது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியும் கூட அதை இயக்குனர் ஹீலியம் விளக்கொளியில் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.

சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள ஈசியார் சாலையில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள் , ஓர் இரவில் நடப்பது போல் உருவாகியுள்ளது. 
வேகமாக உருவாகிவரும்  ஜாம்பி படத்தை படக்குழுவினர் சம்மர் ரிலீசாக வெளியிடவுள்ளனர். 

புவன் நல்லன் இயக்கும்  இப்படத்துக்கு இசை பிரேம்ஜி.